O.F.பெரேரா. கொழும்பு: உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதியின் அலுவலகம், 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).
(8), 189 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இவ்வறிக்கை வரி நிருவாகம், பதவியணியினரும் பொது நிருவாகமும், இறைவரியும் செலவினமும், நடைமுறைப்படுத்தல் நுண்ணாய்வு மேன்முறையீடுகள், முத்திரைத் தீர்வைகள், தகவல் கம்பியூட்டர் வரிமதிப்புக் கட்டுப்பாடு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது. 1981இன் 69ஆம் இலக்க மொத்த விற்பனவு வரிச்சட்டத்தின் கீழான கட்டுரைகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 124(1)ஆம் பிரிவின் நியதிகளில் விதிக்கப்பட்ட தண்டங்கள் ஆகிய நிரல்களும் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் பல்வேறு உள்நாட்டு இறைவரி தொடர்பான அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29257).