நா.இராஜமனோகரன் (தொகுப்பாசிரியர்). வடமாகாணம்: சமூக சேவைகள் திணைக்களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
மாற்று வலுவுடையோரின் வாழ்நிலை பற்றியும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் படைப்பாக்கங்களை உள்ளடக்கியதாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் கை நாம் கொடுக்கும் நம்பிக்கை, இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் அதிஉந்தலாக மாறிவரும் விசேட தேவைக்குரியவர்களின் எண்ணிக்கை, மாற்று வலுவுடையோருக்கான கல்விக் கையளிப்பு, யாழ் மாவட்டத்தில் மாற்று ஆற்றல் உள்ளோருக்கான வளங்களும் வாய்ப்புக்களும், வலது குறைவும் சமகாலப் போக்கும், தோன்றாத்துணை, மன்னார் மாவட்டத்தில் மாற்றாற்றல் உள்ள நபர்கள், விசேட தேவைக்குரியோர், வலி-கிழக்கில் மாற்று வலுவுடையோர், மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் குரலுக்கு செவிசாய்ப்பதன் மூலம் அவர்களது உலகை மகிழ்வானதாக்குவோம், மாற்று ஆற்றலுள்ளோரும் வாழ்வில் சாதிக்கலாம், பார்வையற்றோரின் வாழ்வியல் மேம்பாடு, பேசும் கணனி, சுகாதாரமும் உடல்வளக் குறைபாடும், பலசொல் ஒரு பொருள், ஒரு பெருவெளியிருப்பில், நவீன விண்வெளித் தொழில்நுட்பம், ஓட்டிசம் ஓர் நோக்கு, கொஞ்சம் உங்கள் மூளைக்கு வேலை, மனித குறைபாட்டு விளைவில் எமது பாவனைப் பொருட்களின் பங்களிப்பு, யுத்தத்தினால் இடப்பெயர்வை சந்தித்துள்ள வலுவிழப்புடையவர்களின் உளநிலை, மாற்றுவலுவுள்ளோருக்கான சமூகப் பொறுப்புகள், சமுதாய நீரோட்டத்தில் மாற்று ஆற்றல் உடையவர்கள், லீப் வருடம் கணிக்கப்பெறும் முறை, கொஞ்சம் உங்கள் மூளைக்கு வேலை ஆகிய தமிழ் ஆக்கங்களும் சில சிங்கள ஆங்கில ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.