13372 இலங்கையில் சிறுவர் வறுமை.

கிறிஸ்துவ சிறுவர் நிதியம், பாத்திமா நஸ்ரியா முனாஸ் (தமிழாக்கம்).  கொழும்பு 7: வறுமை ஆராய்ச்சி நிலையம், Centre forPoverty Analysis-CEPA, 29, Gregory’s Road, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

(6), 32 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-1040-50-5.

இது வறுமை ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களான பியோனா ரெம்னன்ட் (Fiona Remnant) மற்றும் அஸ்ரா அப்துல் காதர் (Azra Abdul Cader) ஆகியோரினால் பிரசுரிக்கப்பட்ட ‘இலங்கையில் சிறுவர் வறுமையின் பல்வேறு பரிமாணங்கள்’ என்னும் தலைப்பிலான இலக்கிய மீளாய்வினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுருக்கக் கட்டுரையாகும். இச்சுருக்கமானது இலங்கையில் சிறுவர் வறுமையின் பல்வேறு பரிமாணங்களிலான புரிந்துணர்வுக்குப் பொருத்தமான பல்வேறு அளவுரீதியான பண்புரீதியான தகவல்களைக் கோவையாகக் கொண்டுள்ள இலக்கிய மீளாய்வின் பிரதான கண்டுபிடிப்புகளை சுருக்கமாக விளக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. அறிமுகம், சுகாதாரம், போசணை, கல்வி, ஆயுத முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுவர்களை வேலையில் அமர்த்தல், இடம்பெயர்ந்த தாய்மார்களைக் கொண்ட குடும்பங்களின் சிறுவர்கள், சிறுவர் துஷ்பிரயோகம், நிறுவனங்களின் ஆதரவும் சிறுவர் நீதித்துறையும், வீதிச் சிறுவர்கள், முடிவுரை, உசாத்துணை ஆகிய 12 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16191). 

ஏனைய பதிவுகள்