சிறுவர் செயலகம். கொழும்பு: யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு, ஸ்ரீலங்கா, இணை வெளியீடு, கொழும்பு: மகளிர் விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).
56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
சிறுவர் உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆரம்பப் படிகளை அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்தல் வேண்டும். இந்த ஒருசில வருடங்களைக் கடக்கும் குழந்தை தொடர்பாக எடுக்கும் தீர்மானங்கள் மீதும் நடவடிக்கைகள் மீதும் குழந்தையின் நிலைப்பு, விருத்தி, அபிவிருத்தி என்பன தங்கியுள்ளன. ஆரம்ப குழந்தை விருத்தியில் வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. இதில் உங்கள் குழந்தை, சுகாதாரமும் போசணையும் உணவும் பாதுகாப்பும், ஆதரவும் பராமரித்துக் காத்தலும், சுகாதாரம்-உணவு-போசணை-பாதுகாப்பு, விளையாடுதல், தொடர்புகளைக் கட்டியெழுப்புதல்-அனுபவம் பெறல், விளையாடுதலும் பல்வேறு அனுபவங்களைப் பெறலும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் பல்வேறு விடயங்களை எமக்கு வழங்குகின்றது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16192).