H.M.R.P.ஹேரத் (பிரதம ஆசிரியர்), பி.முத்தையா (இணை ஆசிரியர்). கொழும்பு 4: சுற்றாடல் பாராளுமன்ற விவகார அமைச்சு, யுனிட்டி பிளாசா கட்டிடம், 1வது பதிப்பு, ஜனவரி 1994. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(6), 54 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
இலங்கை சுற்றாடல் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, நொராட் சுற்றாடல் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வெளியிடும் இதழ் இதுவாகும். இவ்விதழில் சுற்றாடல் அல்லது பசுமைக் கணக்காய்வு, இலங்கைத்தீவின் கலாச்சாரம், மரத்தின் மகிமை, சுற்றாடல் பற்றிய நோக்கு, பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை, கழிவினால் ஏற்படும் சுற்றாடல் சுகாதாரத் தீங்குகள், இயந்திரத்திற்குப் பதிலாக யானைகள், சுற்றாடலும் அதன் நிர்வாகமும், இயற்கைச் செல்வாதாரங்களும் சுற்றாடல் கொள்கைத் திட்டமும், புகையிலைப் பயிர்ச்செய்கை புதிய வழிக்குச் செல்கிறது, புவி உச்சி மாநாட்டுக் கோட்பாடுகள், பூர்வீகக் குடிகள் எனப்படுவோர் யார் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24324).