மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கல்வியியல்துறைப் பேராசிரியர் மாரிமுத்து சின்னத்தம்பி அவர்கள் 13.01.2014 அன்று நிகழ்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பின் பின்னர் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய சேர் பொன் இராமநாதன் நினைவுப் பேருரையின் (2014) நூல்வடிவம் இதுவாகும். இலங்கை துரிதமான கைத்தொழில் மயமாக்கம் நோக்கியும் பேண்தகு அபிவிருத்தியை நோக்கியும் அதிக கவனம் செலுத்துவதால் அதற்குத் துணை செய்யத்தக்கதான திறன்களும் தேர்ச்சிகளும் கொண்ட மனிதவளத்தை எமது கல்வியாளர்கள் எமது மண்ணில் விருத்திசெய்யவேண்டியுள்ளது. இதற்கான முயற்சிகளில் அக்கறையின்றி எம்மவர்கள் மருத்துவத்துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் தெளிவான தேவைகள் பற்றிய கணிப்பீடுகள் ஏதுமின்றி மூன்றாம் நிலை, மற்றும் பட்டப்பின் பயிற்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்ற கருத்தை ஆழமாக இவ்வாய்வு பதிவுசெய்துள்ளது.