13388 கலைமலர் 2011: 42ஆவது மலர்.

மாரிமுத்து ஸ்ரீகாந்த் (இதழாசிரியர்), எம்.என்.எப். சப்ரா (துணை இதழாசிரியர்), மு.கௌரிகாந்தன், சரா புவனேஸ்வரன் (காப்பாளர்கள்). கோப்பாய்: கலைமலர்க் குழு, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி).

176 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்ட மலர் இது. 80 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் உலகில் பணியாற்றிவரும் பாரம்பரியம் மிக்க கலாசாலையின் 42ஆவது வருடாந்த மலர் இதுவாகும். ஆசிரிய மாணவர்களின் உணர்வுகளுக்கும், தேடல்களுக்கும் படைப்புத்திறன்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ள இம்மலர் பழமையையும் புதுமையையும் தழுவிய ஆக்கங்களுடன் கதை, கவிதைப் படைப்பிலக்கியங்கள், உரைச்சித்திரங்கள், போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. வடகோவையும் தென்கோவையும் (சரா. புவனேஸ்வரன்), நிலையான அபிவிருத்தியை பாடசாலைகள் மூலம் எவ்வாறு செயற்படுத்துவது (வீ.கருணலிங்கம்), கோளமயமாதலும் இலங்கையின் அண்மைக்கால கல்வித் திட்டமிடல்களும் (த.கோபாலகிருஷ்ணன்), கூழங்கைத் தம்பிரான் முதல் பண்டிதர் வீரகத்தி வரை இலக்கண உலகிற்கு ஈழத்தறிஞரின் பங்களிப்பு (முருகேசு கௌரிகாந்தன்), ஆகிய கட்டுரைகள் விரிவுரையாளர்களால் எழுதப்பட்டவை.

ஏனைய பதிவுகள்