கே.ஏ.முரளி, எஸ்.சசிகலா, கே.சுமந்திரன், எஸ்.சரோஜினிதேவி (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: வர்த்தக மாணவர் மன்றம், யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).
(20), 96 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
வணிக ஜோதி இதழ் யாழ் கனகரத்தின மத்திய மகா வித்தியாலய வர்த்தக மாணவர்களால் ஆண்டு தோறும் வெளியீடு செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் உயர்தர வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இதழாசிரியர்களாக விளங்குகிறார்கள். கணக்கியல், பொருளியல், வர்த்தகம், அளவையியல், இந்து நாகரிகம் சார்ந்த கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. இவ்விதழ் 1986ஃ1987 ஆண்டுப் பகுதிக்கும், 1987/1988 ஆம் ஆண்டுப் பகுதிக்கும் உரியதாக இருப்பினும் இணைந்த தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. 1986/1987 ஆண்டுப் பகுதிக்கு கே.ஏ.முரளி, எஸ்.சசிகலா ஆகியோர் இதழாசிரியர்களாகவும், 1987/1988 ஆம் ஆண்டுப் பகுதிக்கு கே.சுமந்திரன், எஸ்.சரோஜினிதேவி ஆகியோர் இதழாசிரியர்களாகவும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34628).