முருகேசு கௌரிகாந்தன், பாலசிங்கம் பாலகணேசன் (மலராசிரியர்கள்). கோப்பாய்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xiii, 182 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
வாழ்த்துச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலரில் வாழ்க்கைக்குத் தமிழ் பயில் (குன்றக்குடி அடிகளார்), தமிழ் வளர்ப்போம் தமிழால் உயர்வோம் (மலராசிரியர்கள்), மாவீரன் சங்கிலியன்-கவிதை (அகளங்கன்), யாழ்ப்பாண அரசன் வீரசங்கிலி (பா.பாலகணேசன்), யாழ்ப்பாணத் தமிழ்ப் புலமைப் பாரம்பரியம் (சி.தில்லைநாதன்), பேராசிரியர் ஆ.வே. பார்வையும் பதிவும் (மு.கௌரிகாந்தன்), திருக்குறட் பாக்களின் சொற்பயன்பாடு (அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ்), தொல்காப்பியர் வகுத்துக்காட்டும் இலக்கியக் கோட்பாடு (இ.பாலசுந்தரம்), ஈழநாடும் சங்க இலக்கியமும்: நோக்கும் போக்கும் (எஸ்.சிவலிங்கராஜா), அலை ஓசை -கவிதை(சபா.ஜெயராசா), சமகால இலக்கியக் கோலங்கள் (சபா.ஜெயராசா), ஈழத்தில் சங்க இலக்கிய ஆய்வுகள் (கி.விசாகரூபன்), சூர-அசுர யுத்தமும் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனமும் (வ.மகேஸ்வரன்), தமிழ்மொழிப் பாடநூல்களில் இலக்கண அறிமுகம் மொழியியல் நோக்கு (சுபதினி ரமேஸ்), தமிழர் பண்பாட்டில் தாய்த்தெய்வ வழிபாடு (ம.இரகுநாதன்), பேராசிரியர் சிவத்தம்பியின் சங்க இலக்கியத் திறனாய்வு (அம்மன்கிளி முருகதாஸ்), வள்ளுவரின் பெண் மொழி-நோக்கு (செல்வ அம்பிகை நந்தகுமார்), அருணகிரிநாதரின் ஞானத்தமிழ் (கனகசபாபதி நாகேஸ்வரன்), காளிதாசரின் பரிபாடற் பரிச்சயம் (க.இரகுபரன்), தமிழ்மொழியில் சிங்கள மொழிச் செல்வாக்கு (ஆர்.சந்திரகுமாரி), மட்டக்களப்புப் பிரதேச மொழியும் அவற்றின் பிரயோகங்களும் (க.நிதர்சிகா), சுபீட்சமான வாழ்வை நோக்கி-கவிதை (ந.டர்சிகா), கவியிற் தமிழ்ச் சிறப்பு (ஜே.லோஷனா), சுந்தரத் தமிழ் வளர்த்த சுவாமி விபுலானந்தர் (அ.ப.ராஷிதா), தமிழ்த்தூது தனிநாயகம் (அ.தனுஷியா), அதிகனும் ஒளவையும் (அ.பிறேமி), சங்கத் தலைமைப் புலவர் கபிலரின் பெருமைகள் (க.யரூஷனா கந்தசாமி), கம்பராமாயணத்தில் கும்பகர்ணன் (சுகன்யா இராசதுரை), என் தமிழ் முத்தமிழ் -கவிதை (கே.கிருஜிகா), இஸ்லாமிய இலக்கியப் போக்கு (எம். ஐ.எப்.நஜீஹா), தமிழ் இலக்கியத்தில் மதச் செல்வாக்கு (அ.மேரி அனிதா), தமிழும் சைவமும் (ஆர்.தனுஷிகா), கடைசிக் கூப்பன் காசு-சிறுகதை (மேகலா பரமசிவம்), புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி (எஸ்.சாரங்கா), தமிழ் கற்பதனால் ஆயபயன் (ச.சங்கீதன்), சிலப்பதிகாரக் காப்பியத்தில் இயல், இசை, நாடகச் செல்வாக்கு (தர்சிகா பிரேம்குமார்), கனவுகள் நனவாக-கவிதை (க.யசோதரன்), ஒப்பாரிப் பாடல்கள் (எம்.மஞ்சுகா), நெஞ்சையள்ளும் பாரதியார் கவிதைகள் (ஏ.சுதர்சினி நிரோசா), விடுதலை (சர்மிளா ஜீவன்குமார்) ஆகிய 37 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60731).