முருகேசு கௌரிகாந்தன், பாலசிங்கம் பாலகணேசன் (மலராசிரியர்கள்). கோப்பாய்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xvi, 92 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
வாழ்த்துச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலர், தமிழ்க் காவலர் கா.பொ.இரத்தினம்: நற்றமிழாய் வாழ்ந்த நன்மகனார் (சுகந்தினி சிறிமுரளிதரன்), முத்தமிழ் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி), யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய விமர்சனம் (பாலசிங்கம் பாலகணேசன்), போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பும் தமிழர் பிரதேசங்களின் அழிவும் (மு.குணசிங்கம்), தமிழ்ப் பகுதிகளுள் பழமையின் சின்னங்களும் அவை பேணப்படுதலின் அவசியமும் (வ.ந.கிரிதான்), ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுந்த நூல்கள் (ஆர்.திலகராணி), யாழ்ப்பாணம்: தோற்றமும் தொடர்ச்சியும் (சஞ்சிகா இராசேந்திரம்), யாழ்ப்பாண இராச்சியம் (ஜானுஷா பாலசுப்பிரமணியம்), யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்று மூலங்கள் (தவநேசன் லென்சி), நல்லூர் மந்திரிமனை (ஜெ.பார்த்திகா), யமுனா ஏரி (ஜெ.டினோசன்), யாழ்ப்பாண வைபவ மாலை (எஸ்.பிரியங்கா), ஈழராஜா எல்லாளன் (எஸ்.தர்சிகா), யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாறு (ந.கலையரசி), யாழ்ப்பாண அரசின் வரலாற்றுத் தடம் (ப.அபிராமி), கோட்டையின் மேலாதிக்கத்தின்கீழ் யாழ்ப்பாண இராச்சியம் (நிருஜா ஸ்ரீஸ்கந்தராஜா), யாழ்ப்பாணத்தின் சிறந்த துறைமுகமாக விளங்கிய ஊர்காவற்றுறை (யோ.வினுசியா), யாழ்ப்பாண இராச்சியத்தின் தனித்துவம் (ம.நிர்மலா), யாழ்ப்பாண இராச்சியம் (எஸ்.தபோசினி), புகழ்பூத்த யாழ்ப்பாண இராச்சியம் (வி.ஜீவகி), யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய குறிப்புக்கள் (ரி.சுகன்யா), வரலாற்றுப் பெருமைமிக்க யாழ்ப்பாண இராச்சியம் (கே.ஜனனி), யாழ்ப்பாண இராச்சியத்தின் பெருமை (கே.கிருஸ்திகா), மொழிசார் பண்பாட்டுக் கூறுகள் (ரி.முபீதா), மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகமும்: யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட நிலைமைகள் (சு.சரண்யா), யாழ்ப்பாண இராச்சியம் கி.பி.13-கி.பி.17 வரை (ய.தரணிகா), யாழ்ப்பாணப் பண்பாடு: குழு நாடகம் (இ.இந்து), யாழ்ப்பாண இராச்சிய ஆட்சிமுறை (ச.தர்சிகா), காலத்தால் முந்திய யாழ்ப்பாண இராச்சியம் ஆகிய படைப்பாக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62119).