ஜகத் பண்டாரநாயக்க (மூலம்), அ.சிவநேசராஜா (தமிழாக்கம்). பன்னிப்பிட்டி: ஜகத் பண்டாரநாயக்க, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
x, 220 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-96178-1-8.
க.பொ.த உயர்தர பரீட்சையில் வணிகக் கல்வியை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் என்ற பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்பயிற்சி நூல். வணிகத்தின் பின்னணி, வணிகத்தின் பரம்பல், வணிகச் சூழல், வணிக அமைப்புகள், வணிகத் தகவல் முறைமை, வணிகமும் துணைச் சேவைகளும், சர்வதேச வணிகம்ஃ வெளிநாட்டு வியாபாரம், அரசும் வணிகமும் நுகர்வோர் பாதுகாப்பும் ஆகிய பாடப்பரப்புகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. ஜகத் பண்டாரநாயக்க ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கை பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36479).