13415 இம்மானுவேல் நாடகம் (வடமோடி நாட்டுக்கூத்து).

சமியேல் பிரகாசம் (மூலம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).

vii, 223 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7331-00-3.

இத்தாலி நாட்டை ஆண்டுவந்தவனும் சைவசமயத்தைச் சேர்ந்தவனுமான மல்கிறித்து ராயன் என்ற மன்னனின் இரு பிள்ளைகளான கலில் (மகன்), ஞானசோதி (மகள்) இருவரும் இளவயதில் கிறிஸ்தவ மதமாற்றத்துக்குள்ளாகி பெற்றோர் அறியாமல் ஞானஸ்நானம் செய்துகொள்கின்றனர். மல்கிறித்து மன்னன் அவர்களை களுமரமேற்றிக் கொல்ல மளுவருக்கு ஆணையிடுகிறான். அவர்களிடமிருந்து தேவதூதர்களால் காப்பாற்றப்பட்டு இறுதிவேளையில் கிரேக்க நாட்டுக்கு சென்றடைகின்றனர். ஞானசோதி கிரேக்க மன்னன் மடுத்தீன் எம்பரதோரின் மனைவியாகிறாள். இம்மானுவேல் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்ற மகன் கலீல் அவ்வரசனின் தளபதியாகிறான். இறுதியில் கிரேக்க மன்னனுக்கு வரிசெலுத்தாத மல்கிறித்து மன்னனுடன் போரிட்டு வென்றவேளையில் அவனது பிள்ளைகள் கிரேக்கத்தில் உள்ளதை அறிந்து தானும் சைவத்திலிருந்து மதமாற்றம் பெற்று கிறிஸ்தவனாகி குடும்பத்துடன் சேர்வதாக கதை முடிகின்றது. கிறிஸ்தவ மதமாற்றத்தை வலியுறுத்தும் பாணியில் அமைந்த வடமோடி நாட்டுக்கூத்து இதுவாகும். புலவர் மைக்கேல் பிரகாசம் (05.08.1914-1986) மன்னார் மாதோட்டத்தையண்டிய கட்டுக்கரைக்குளத்தைச் சேர்ந்தவர். குளப் புனரமைப்புக் காரணமாக ஆட்காட்டிவெளிக் கிராமத்தில் பிரித்தானியரால் மீளக்குடியேற்றப்பட்டவர்கள். 1950களில் இந்நாடகம் இரண்டு இரவுக் கதையாக எழுதப்பெற்று 1960இல் ஆட்காட்டி வெளியில் மேடையேறியது. புலவர் பிரகாசம் மறைந்தபின் அவரது மகனான பிரகாசம் சந்தியோகு இந்நாடகப் பிரதியைப் பாதுகாத்து 1994இல் மீண்டும் கறுக்காக்களம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் இதனை மேடையேற்றினார். பின்னர் மீண்டும் மூன்றாவது தடவை 2015இல் மேடையேற்றம் கண்டு அப்பிரதேச மக்களின் மனதில் இடம்கொண்டது. இந்நாட்டுக்கூத்தின் நூல்வடிவம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

16964 இடைக்காடு எம் தாயகம்: வரலாறும் வளர்ச்சியும்.

நாராயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன். யாழ்ப்பாணம்: வே.இளங்கோ, செயற்பாட்டாளர், இடைக்காடு இணையம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 90 பக்கம், 24 புகைப்படத் தகடுகள், வரைபடம்,