சி.ஜெயசங்கர் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
சிலாமுனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் பங்கு பற்றி வரும் கலைஞர்களது அனுபவங்கள் எழுத்து வடிவத்தில் ஒலி, ஒளிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்யப்பட்ட பதிவுகளில் எழுத்து வடிவத்தில் வந்திருப்பதன் ஒரு பகுதி புத்தக வடிவம் பெற்றுள்ளது. கூத்து மீளுருவாக்கத்தின் அரசியல் -முன்னுரை (சி.ஜெயசங்கர்), கூத்துக்கலையின் தனித்துவமும், அதன் பாரம்பரிய மரபுமுறை வளர்ச்சியும், இக்கலை மூலம் நான் பெற்ற அனுபவங்களும், பயிற்சிகளும்(செ.சிவநாயகம்-ஏட்டு அண்ணாவியார்), சீலாமுனையில் இடம்பெற்ற கூத்து மீளுருவாக்கமும் எனது அனுபவங்களும் (து.கௌரீஸ்வரன்), நான் கூத்தில் பெற்ற அனுபவம் (செ.ஜோன்சன்), கூத்துக் கலையும் நானும் (து.சோதீஸ்வரன்), கூத்துக்கலையில் நான் பெற்ற அனுபவம் (பா.சுகந்தன்), கூத்துக்கலையில் நான் பெற்ற அனுபவம் (ஜோ.கருணேந்திரா) ஆகிய ஆளுமைகளின்அனுபவங்கள் இத்தொகுதியில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001421).