13421 பழி சுமந்த செங்கோல்: தென்மோடிக் கூத்து.

யேசுதாசன் இக்னேஷியஸ். (புனைபெயர்: பிரபா). யாழ்ப்பாணம்: தவத்திரு தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றம், புனித பத்திரிசியார் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: ஜெயா அச்சகம்).

xvi, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50569-0-8.

தாவீது மன்னனை ஆட்கொண்ட காமம் அவன் இதயத்தை குடும்பச் சங்கிலியில் மாட்டி ஆன்மீகக் குருடனாக்கி அழிக்கும் கதை இது. மறுபக்கமாக ஊரியாஸ் என்னும் உண்மைப் போர்வீரனின் துன்பக்கதையாகவும் இது அமைந்துவிடுகின்றது. ஊரியாஸ் போன்ற அப்பாவிகள் எல்லாப் போர்களிலும் அநியாய மரணத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். அன்றும் இன்றும் நடந்தேறும் போரின் விபரீத துன்பவியல் நாடகங்கள் ஊரியாஸ்  தொட்டு ஈழப் போரின் பாலியல் கொடுமைகள், பழிவாங்கல் கொலைக;டாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதே சோகமான உண்மை. அதை நினைவூட்டுவதற்கு ஆசிரியரின் கதை பொருத்தமாக  அமைந்துள்ளது. இந்த தென்மோடிக் கூத்து நூல் 18 காட்சிகளை 60 பக்கங்களில் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 202344).  

ஏனைய பதிவுகள்