13433 செந்தமிழ்ப் பூம்பொழில்(பகுதி க).

ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை, சுதுமலை, 1வது பதிப்பு, ஆனி 1934. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணை).

x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

ஆசிரிய வகுப்பு மாணவர்களின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட நூல். ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை அவர்களால் பல அறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்துப் பிரசுரஞ்செய்யப்பட்டது. இதில் செந்தமிழ்த் தெய்வ வழிபாடு (க.சோமசுந்தரப் புலவர்), செந்தமிழன்னை (நவநீதகிருஷ்ண பாரதியார்), யாழ்ப்பாணத் தொல்குடிகள் (சுவாமி ஞானப்பிரகாசர்), ‘கைவளை திருத்துபு கடைக்கணினுணர்ந்தாள்’ (ஓர் நண்பர்), கணவற்கினியளாங் கற்பரசி (மு.நல்லதம்பி), பொருநராற்றுப்படை (சோ.இளமுருகனார்), பட்டினப்பாலை (சுதுமலை ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை), கர்நாடக சங்கீதம் (வண்ணை வை.இராமநாதன்), இலங்காதேவி (சுதுமலை ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை), ஊசல்வரி (மு.நல்லதம்பி), இலங்காதேவியின் திருப்பள்ளியெழுச்சி (சுதுமலை ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை) ஆகிய இலக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் தேர்ந்து தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2602).

ஏனைய பதிவுகள்