இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: இரா.ஜெயக்குமார், 68/8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 2வது திருத்திய பதிப்பு, மார்கழி 2017, 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
vi, 146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-43965-0-0.
2017ஆம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஆசிரியர் வழிகாட்டி நூலுக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்ட இந்நூல் மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் கொண்டுள்ளது. தங்கம் விதைத்தால் தங்கம் விளையுமா? எலியும் சேவலும், ஏமாந்த நாய், குரங்குச் சேட்டை, தந்தை மகனுக்கு எழுதிய கடிதம், பறவைகள் பலவிதம், அழ.வள்ளியப்பா பாடல், மூட ஆமை, தென்னை மரக் கும்மி, புதிய ஆத்திசூடி, கண்ணகி வழக்குரைத்தல், செய்தித் தாள்கள், செய்ந்நன்றி அறிதல், சேர்.ஐசாக் நியூற்றன், புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை, ஈசலும் புற்றும், ஒழுக்கம் உயர்வளிக்கும், மலர்கள் வாழ்க! மாநிலம் வாழ்க!, குறும்பா, கம்பரிற் பாலர் கல்வி, மாதிரி வினாத்தாள் (3 தவணைகள்), விடைகள், ஒலி வேறுபாட்டு சொற்களும் பொருள்களும், தமிழ்மொழித்தினப் போட்டிகளுக்கான புள்ளித் திட்டம், மாதிரி ஆக்கங்கள் ஆகிய 27 அலகுகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் யா/உடுவில் மான்ஸ் த.க.பாடசாலையின் அதிபராகப் பணியாற்றுகிறார்.