13447 ஆரம்ப தூயகணிதம்.

சி.நடராசர். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

x, 393 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

நூலாசிரியர் சி.நடராசர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஆங்கிலத்தில் எழுதிய Elements of Pure Mathematics என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். இதில் திரிகோணகணிதம், ஆள்கூற்றுக் கேத்திரகணிதம், நுண்கணிதம், அட்சர கணிதம், திண்மக் கேத்திரகணிதம் ஆகிய ஐந்து பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளதுடன் விரிவான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14074).

ஏனைய பதிவுகள்

10071 ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் (உரையுடன்).100

ஒளவையார் (மூலம்), அகளங்கன் (விளக்கவுரை). வவுனியா: இந்து மாமன்றம், 1வது பதிப்பு, ஜனவரி 1996. (வவுனியா: சுதன் அச்சகம்). (8), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:19×12.5 சமீ. பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்திவிழா

11385 மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு.

தி.சதாசிவ ஐயர் (தொகுத்துப் பரிசோதித்தவர்). மட்டக்களப்பு: D.E.கணபதிப்பிள்ளை, தலைவர், மட்டக்களப்பு தெற்கு தமிழ் ஆசிரியர் சங்கம், 1வது பதிப்பு, 1940. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xlvi, 111 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.00,