பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(10), 198 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
கல்வி அமைச்சின் 1979ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட நூல். எண் கணிதம், அட்சர கணிதம், கேத்திர கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் எண் கணிதப் பிரிவில், தள நேர்கோட்டுருவங்களின் சுற்றளவுகளும் பரப்பளவுகளும், நூற்றுவீதம், எளிய வட்டி ஆகிய பாடங்களையும், அட்சர கணிதப் பிரிவில், காரணிப்படுத்துதல், அட்சர கணிதப் பின்னங்கள், இருபடிச் சமன்பாடுகள், சுட்டிகள், மடக்கைகள் ஆகிய பாடங்களையும், கேத்திர கணிதப்பிரிவில், இணைகரங்களினதும் முக்கோணிகளினதும் பரப்பளவுகள், செங்கோண முக்கோணிகள், மடக்கை அட்டவணைகள் ஆகிய பாடங்களையும், உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11204).