வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).
x, 254 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42543-0-5.
விரிவான விளக்கங்கள், பொருத்தமான உதாரணங்கள், நிறைவான பயிற்சிகள், திருத்தமான விடைகள் ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுள்ள ஒன்பதாம்; தரத்துக்குரிய இப்பயிற்சிநூல் 2015 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகப் பூரணமான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டங்கள், இடப்பெறுமானம், முழு எண்களுடனான கணிதச் செய்கைகள், காலம் எண்கோடு, மதிப்பிடலும் மட்டம் தட்டலும், கோணங்கள், திசைகள், பின்னங்கள், தெரிதல், காரணிகளும் மடங்குகளும், நேர்கோட்டுத் தளவுருவங்கள், தசமங்கள், எண் வகைகளும் எண் கோலங்களும், நீளம், திரவ அளவீடு, திண்மங்கள், அட்சரகணிதக் குறியீடுகள், அட்சரகணிதக் கோவைகளின் உருவாக்கலும் பிரதியிடுதலும், திணிவு, விகிதம், தரவுகளைச் சேகரித்தலும் வகைக் குறித்தலும் தரவுகளுக்கு விளக்கம் கூறல், சுட்டிகள், பரப்பளவு ஆகிய 25 பாடங்களும் அவற்றின் பயிற்சிகளுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.