T.நாகரத்தினம். பளை: T.திருச்செல்வநாதன், விஷ்ணு அகம், கண்டி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).
(8), 116 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 30., அளவு: 21×13.5 சமீ.
இரசாயனவியல் கற்கையின்போது செய்முறைப் பயிற்சி இன்றியமையாததாகும். இந்நூல் மாணவர்களின் ஆய்வுகூடச் செய்முறைப் பயிற்சிகளின்போது, அவர்களுக்கு உதவும் வகையில் 100 பாடத் தலைப்புகளின்கீழ் பொருத்தமான பாட விளக்கக் குறிப்புகளுடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35309).