13467 இயற்கை அனர்த்தங்கள்.

கேந்திரேஸ்வரி  இராதாகிருஷ்ணன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீடு, குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 225., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-7461-27-4.

இயற்கை அனர்த்தங்கள்: ஓர் அறிமுகம், புவியியல் சார்ந்த இயற்கை ஆபத்துக்கள் (புவிநடுக்கம், பனிச்சரிவு, நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு), நீரியல் சார்ந்த இயற்கை ஆபத்துக்கள் (வெள்ளப்பெருக்கு, சுனாமி, லைம்நிக் வெளியேற்றுகை), காலநிலை சார்ந்த இயற்கை அனர்த்தங்கள் (பனிப்புயல், வெப்பக்காற்றலை, வரட்சி,  இடி மின்னல், டொர்னாடோ, சூறாவளி, இடிப்புயல்கள்), காட்டுத்தீ, தொற்றுநோய்களும் (Disease) கொள்ளை நோய்களும் (Epidemic), விண்வெளி (அண்டவெளித் தாக்குதல், சூரியக் கதிர்ப் பாய்ச்சல்), இலங்கையில் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் இளையோர்க்கு விளங்கும் வகையில் எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 128ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16544 நாளைய நான்.

சரணிகா இராசேந்திரம். யாழ்ப்பாணம்: S.T.T.S. வெளியீடு, சங்கானை, 1வது பதிப்பு, சித்திரை 2021. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை). iv, 61 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×11.5 சமீ.,