வீ.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: வீ.ச.சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: கிரிப்ஸ்).
174 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51797-0-6.
இந்நூல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரத்துக்குரிய உயிரியல் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டது. தேர்ச்சிமட்டங்களின் அடிப்படையில் நான்காவது நிலையில் இருந்து ஆறாவது தேர்ச்சி மட்டம் வரையிலான பாடத்திட்ட பகுதிகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. போசணையும் அதன் வகைகளும், தாவரங்களின் கனிப்பொருட் போசணை, மனிதனின் உணவின் கூறுகளும் தொழில்களும், மனிதனின் உணவுக் கால்வாய், சுவாசக் கட்டமைப்புகள், மனிதனின் சுவாசத் தொகுதி, தாவரங்களில் நீரின் அசைவு, உரியத்தின் ஊடான கொண்டுசெல்லல், சுற்றோட்டத் தொகுதிகள், குருதியின் ஆக்கக்கூறுகளும் தொழில்களும் ஆகிய பத்துப் பாடப்பரப்புகளை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49482).