சிலாவத்தை கிருஷ்ணராசா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
24 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 225., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-51-9.
இந்நூலின் நோக்கம், பறவைகளின் பெயர்களையும் அவற்றின் அடிப்படைப் பண்புகளையும் கூறுதலாகும். இங்கு மணிப்புறா, கொட்டுக்காகம், சிறுமீன் கொத்தி, பச்சைச் சிட்டு, இமாலயக் குருவி, கொண்டைக்கிளாரி, வெண்ணாத்தி, மழைக்குருவி, ஆள்காட்டி, கரிச்சான், கானாங்கோழி, குருட்டுக்கொக்கு, கொண்டலாத்தி, சம்புக்கோழி, மாம்பழக் குருவி, காட்டுக்கோழி, கூழைக்கடா, நிலக்கிளி, செம்பகம், தையல்சிட்டு, செம்மார்பு குக்குறுவான், நீளவால் இலைக்கோழி, குக்குறுப்பான், செம்பருந்து, ஆறுமணிக்குருவி, இருவாயன், தினைக்குருவி, புலுனி, இலங்கை தொங்கும் கிளி, காடை, இலங்கை கௌதாரி, வயல் தவட்டை, சிவப்புமுக பூங்குயில், நீண்டசொண்டு தேன்சிட்டு, நீர்க்காகம், முக்குளிப்பான், தூக்கணாங்குருவி, சிறகை, கரிக்குருவி, வாலாட்டிக் குருவி ஆகிய 40 பறவைகள் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிலாவத்தை கிருஷ்ணராஜா முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தனது இளமானிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின் கல்வியியல்துறையில் டிப்ளோமாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தற்போது டெய்லி மிரர் பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுகின்றார். தினக்குரல் வார இதழின்; ‘பரிசு” இதழில் இலங்கைப் பறவைகள் பற்றி இவர் எழுதிய 20 பதிவுகளுடன் மேலும் 20 புதிய பதிவுகளையும் சேர்த்து இந்நூலைஆக்கியுள்ளார். இந்நூல் 053ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.