13475 நனோ தொழில்நுட்பத்தை நோக்கி.

செ.அன்ரன். மல்லாகம்: கானப்பிரியன் வெளியீட்டாளர்கள், செல்வகிரி, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2011. (மல்லாகம்: ராம்நெற்.கொம், காங்கேசன்துறை வீதி).

(3), 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

நனோ தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வருகின்ற ஒன்றாகக் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழிநுட்ப துறையாகவும் உருவாகி வருகின்றது.  இலத்திரனியல் துறை, உணவுற்பத்தி, மருத்துவம் எனப்பல்வேறு துறைகளிலும் நனோ தொழினுட்பம் ஒரு பயன்பாடுடையதாக மாறிவருகின்றது. நனோ தொழில்நுட்பம் என்பது 100 நனோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புக்களைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கப்படும் கருவிகளும் அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நனோ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றது. நனோ தொழில்நுட்பம் என்றால் என்ன? நனோ தொழில்நுட்பத்தின் புதிய போக்கு, நனோ தொழில்நுட்பத்தின் விந்தை, நனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், தொழிற்சாலைகளிலும் மற்றும் நுகர்வுப் பொரள் உற்பத்திகளிலும் நனோ தொழில்நுட்பம், இயற்கையில் நனோ தொகுதிகள் ஆகிய அத்தியாயங்களில் நனோ தொழில்நுட்பம் (Nano Technology) பற்றிய வரலாற்றையும் அதன் பயன்பாடுகளையும் ஆசிரியர் விளக்குகின்றார். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24934). 

ஏனைய பதிவுகள்