கல்பனா சந்திரசேகர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பிரயோக விஞ்ஞானப் பிரிவு, யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).
(6), 113 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் வடமாகாணத்தில் விஞ்ஞான அறிவையும் திறன்களையும் விருத்தி செய்யும் விதமாகப் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. வருடாவருடம் பாடசாலைகளுக்கு இடையிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலும் கண்காட்சி, சுவரொட்டி, கட்டுரை, பேச்சு, வினாவிடை, பாடசாலைத் தோட்டம் ஆகிய பல்வேறு வகையான போட்டிகள் நடாத்தி, வெற்றியாளர்களுக்குப் பரிசளித்து வருகின்றன. யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மற்றுமொரு பணியாக இந்நூல் வெளியீடும் 1999 முதல் இடம்பெறுகின்றது. இத்தொகுதியில் காலநிலை மாற்றமும் பயிராக்கவியல் முறைகளும் (கார்த்திகேசு ஜெயவாணன்), குடிநீர்வளப் பற்றாக்குறை: உடனடி தீர்வு காணப்படவேண்டிய ஓர் உலகளாவிய சவால் (சத்தியமூர்த்தி சாருஜன்), நனோ தொழில்நுட்பம் அறிவியலின் அடுத்ததொரு படி (சிவதர்சனி இராசலிங்கம்), இலக்கமுறை பூர்வீகம் (வீ.வினோகரன்), Bioplastics ஒரு பார்வை (துஷ்யந்தி யாதவகுலசிங்கம்), பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வேம்பின் பங்களிப்பு (தர்சனா குணரத்தினம்), அறுவடைக்குப் பிந்திய இழப்புகள் (கிரிஜா நிசாந்தன்), தற்கால இலங்கையின் தொழினுட்பக் கல்வி-அறிமுகம் (கல்பனா நதிபரன்), கரையோர வீட்டுத்தோட்டம் (நாகரத்தின திருச்செல்வன்), கோழிகளைத் தாக்கும் நோய்கள் (சுசந்தா பிரதீபன்), வானிலையும் நாளை ஆயுதமாகும் (காலிங்கராசா ஹரிச்சந்திரா) ஆகிய பிரயோக விஞ்ஞானக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.