13477 அவசரகால முதலுதவி (உடனடித் தேவையான பயிற்சிநூல்).

வி.கே.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், 73 கண்டி வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

xiii, 96 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-

முதலுதவி பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் வகையில் எளிய மொழிநடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒரு முதலுதவியாளன் எத்தகைய பண்புகளைக் கொண்டவனாயிருத்தல் வேண்டும், அவசரகால நிலையில் எவ்வாறு செயற்படவேண்டும், ஒரு நோயாளியை எப்படி அணுகவேண்டும் என்பன போன்ற தகவல்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. முதலுதவி தொடர்பான ஆரம்ப சுகாதாரக் கவனிப்பு, கழிவகற்றல், நன்னீர், நீர்க்கழிவு, உணவு தொடர்பான சுகாதாரம், சுற்றுச் சூழல், தனியார் சுகாதாரம், பொதுச் சுகாதாரம் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவசரகால முதலுதவி-அறிமுகம், குருதி தொடர்பான முதலுதவி, மூச்சடைப்பு-மீளவுயிர்ப்பு, நரம்புத் தொகுதியில் ஏற்படும் பிரச்சினைகள், என்பு முறிவுகள், நஞ்சூட்டல், நானாவித முதலுதவி, மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்புகள், பிராணிகள் கடித்தல், நீரிழிவினால் ஏற்படும் கோமா நிலை, இதய நோய், பொதுக் காயங்கள், வெடிகுண்டினால் ஏற்படும் காயங்கள், நோயாளியை கொண்டு செல்லுதல், அணியங்களும் (Dressing) கட்டுத் துணிகளும், முதலுதவிப் பெட்டி, முதலுதவி சேவையில் மருந்துப் பாவனை, முதலுதவி தொடர்பான ஆரம்ப சுகாதாரக் கவனிப்பு, முதலுதவி தொடர்பான உடலக உறுப்புக்கள் சில, முதலுதவி தொடர்பாக சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டிய சில நோய்கள், உளவளப் பிரச்சினைகள், முதலுதவித் தொண்டர்களின் சேவைகள், நிறைவுரை ஆகிய 23 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு விளக்கப்படங்களுடன் விடயங்கள் தரப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  197728). 

ஏனைய பதிவுகள்

16673 தாவாடிக்காரர்கள் (சிறுகதைகள்).

க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 93 பக்கம், விலை: ரூபா