எஸ்.ஐ.எம்.கலீல். பேராதனை: எஸ்.ஐ. முஹம்மது கலீல், 33 A,ஹேந்தெனிய, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கெலிஓய: நிஷின் ஓப்செட் பிரின்டர்ஸ்).
114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51768-0-4.
உடற் பருமன் இன்றைய உலகில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு உடல் வியாதிகளுக்கும் அது வழிகோலியுள்ளது. உடற்பருமன் (Obecity) சார்ந்த நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வழிகோலும் வகையில் உடற்பருமனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இந்நூல் விளக்குகின்றது. உடற்பருமன் வாழ்நாளைக் குறைக்கும், உணவு, உணவு உட்கொள்ளலும் உணவின் தேவைகளும், உணவருந்துதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம், உணவு-பருமன் தொடர்பான ஹதீஸ்கள் சில, உணவின் செயற்பாடுகள், உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணிகள், உடல் வளர்ச்சி, விட்டமின்களும் தாதுப்பொருட்களும், மூட நம்பிக்கைகள், ஒவ்வாமை, சாப்பிட வேண்டிய அளவு, உணவு பற்றிய சிந்தனை, உட்கொள்ளலும் வெளியேற்றலும், அளவு கருவிகள், உடல் பருமனுக்கான காரணங்கள், பருமனும் பரம்பரைக் காரணிகளும், பருமனை கண்டறியும் முறைகள், உகந்த நிறை, பருமனை அவதானிக்க இலகுவான முறைகள், கொழுப்பு சேகரிக்கப்படும் பகுதிகள், பருமனும் அதன் ஆபத்துக்களும், பலமற்றதும் மிருதுவானதுமான தசைகள், அதிக சக்தி விரயம், மூட்டுகளும் எலும்புகளும், முதுகு, கால், நோவு, மூட்டுகளுக்கு சக்தி, உடைவு முறிவு விபத்துக்கள், கொலஸ்ட்ரோல், இருதய நோய்கள், சுவாச உறுப்புகள், ஜீரணம் சம்பந்தமான உறுப்புக்கள் என இன்னோரன்ன 66 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.