வட மாகாண சுகாதார அமைச்சு. யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் சிறுவர்களின் அன்றாட உடற்பயிற்சி செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வழிமுறைகள், உடற்பருமனும் உடற் பயிற்சியும், உடற் பயிற்சி செய்வதால் உடலையும் உயிரையும் பாதுகாக்கலாம், நீரிழிவு நோய் ஏற்படுவதை உடற்பயிற்சி மூலம் தடுப்போம், உங்களுக்கு உயர் குருதி அமுக்கம் உள்ளதா? பெண்களின் ஆரோக்கியம், கார்ப்பகாலத்தின் போதான உடற்பயிற்சிகளும் மெய்நிலைகளும், பிரசவத்திற்குப் பின்னான உடற்பருமனும் பயிற்சிகளும், பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்னரான உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சியும் ஒஸ்டியோபோரோசிசும், அனீமியா எனப்படும் இரத்தசோகை ஆகிய தலைப்புகளில் சுகாதார விடயங்கள் பேசப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதார அமைச்சு 2016இல் நடத்திய வடமாகாண ஆரோக்கிய விழாவையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இதுவும் ஒன்று.