பா.பிரசாந்தன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
iv, 12 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பீடைநாசினிகள் வெவ்வேறு முறைகளில் எமது உடலுள் உட்சென்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே பீடை நாசினிகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும். இந்நூல் பீடைகொல்லித் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சுகாதாரச் செய்திகளையும் வண்ணப்பட விளக்கங்களுடன் வழங்குகின்றது.