இ.தெய்வேந்திரன். யாழ்ப்பாணம்: யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம், இல. 5, பழைய பூங்கா வீதி, சுண்டுக்குளி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).
40 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இலங்கையின் வட பகுதிகளில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கான ஆலோசனைகள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக எமது பகுதிகளில் இலகுவில் தடுக்கக்கூடிய நோய்கள் தொற்றும் தன்மை, தொற்றாத் தன்மை, மன அழுத்தம், போதைப் பொருள்களின் தாக்கம் என்பன பரவி வருவதைக் காண்கிறோம். இவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை எமது மக்கள் பின்பற்றி தம்மைத்தாமே நோயிலிருந்து காப்பாற்றும் வழிமுறைகளை இக்கையேடு வழங்குகின்றது. போதைப் பொருள் பாவனை, டெங்கு நோய், இன்புளுவென்சா, நீரிழிவு, புற்றுநோய், கசரோகம், வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், தெள்ளுகளினால் பரவும் நோய்கள், எயிட்ஸ், சீக்கோவைரஸ் ஆகியவை பற்றிய சுருக்க அறிவுறுத்தல்களை இந்நூல் கொண்டுள்ளது.