சுகாதார அமைச்சு. இலங்கை: சுகாதார அமைச்சு, கொழும்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஆரம்ப சுகாதார சேவையாளருக்கான தகவல் வழிகாட்டியாக இலங்கை சுகாதார அமைச்சினால் இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. புகைத்தலை நிறுத்துதல், மதுபாவனையை நிறுத்துதல், உடற்றிணிவு சுட்டியை சரிவரப் பேணல், கிரமமாக உடற்பயிற்சி செய்தல், நாளொன்றிற்கு ஐந்து பங்கு பழங்கள், மரக்கறி வகைகளை உட்கொள்ள வேண்டும், நாளொன்றிற்கு ஒரு நபருக்கு ஒரு தேக்கரண்டி உப்பை மட்டுமே சேர்க்கவேண்டும், இனிப்புப் பாவனையைக் கட்டுப்படுத்துதல், ட்ரான்ஸ் கொழுப்பமிலம் சேர்க்கப்பட்ட உணவின் பாவனையைக் குறைத்தல், உளநலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள், ஒருவர் தன் ஆரோக்கிய நிலையை அறிந்திருத்தல், உங்களுக்கென பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறையைப் பின்பற்றுதல் ஆகிய பதினொரு தலைப்புகளில் ஆரம்ப சுகாதார சேவையாளருக்கான இவ்வழிகாட்டியின் முதலாம் பாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.