சி.யமுனானந்தா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா, மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி, மார்புநோய்ச் சிகிச்சை நிலையம், பண்ணை, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
vi, 112 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-54033-0-6.
காசநோய் வராது தடுக்கக்கூடிய ஒரு நோய். நோய்த் தொற்று ஏற்பட்டால் முற்றாகக் குணமடையக்கூடியது. இருந்தும் சமூக அக்கறையும் அறிவும் இன்றி காசநோயால் பலர் இறக்கிறார்கள். ஒவ்வொரு நோயாளியும் தனக்கு உண்டான காசநோய் உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் பரவாது தடுக்க உறுதிகொள்ள வேண்டும். இதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. காசநோயும் சுவாச ஆரோக்கியமும்/நுரையீரலில் ஏற்படும் காசநோய்/நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய்/சிறுவர்களில் காசநோய்/பெண்களில் காசநோய்/காசநோயும் சலரோகமும்/மருத்துவப் புவியியல்ரீதியில் காசநோயின் தாக்கம்/ காசநோயும் புகைத்தலும்/ காசநோயும் மதுபானமும்/ காசநோயும் போசாக்கும்/ காசநோயும் எயிட்ஸ் நோயும்/முதியவர்களில் காசநோய்/ மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்/காசநோயினை ஆய்வுகூடங்களில் கண்டறிதல்/ காசநோயிற்கான சிகிச்சை/காசநோய்க் கட்டுப்பாட்டில் சுகாதார உத்தியோகத்தர்களது செயற்பாடு/ காசநோய் கண்காணிப்பும் கட்டுப்பாடும் சம்பந்தமான நடவடிக்கைகளை வலுவூட்டல்/ காசநோய் பற்றிய விழிப்புணர்வு/ காசநோய் தொடர்பான பொதுவான ஐயங்களும் அதற்கான விளக்கங்களும்/ காசநோய் நலம்பேணலில் சமூகத்தின் பங்கு/ காசநோய் தொடர்பாக சமூக மாற்றத்திற்கான துணுக்குகள்/ காசநோய்க் களைவில் கவனிக்கப்பட வேண்டிய பிரயோக மனித உரிமை அணுகல்/ சூழல் முகாமைத்துவம் மூலம் காசநோய்த் தொற்றலைக் கட்டுப்படுத்துதல்/ காசநோய் ஏற்பட்டு உள்ளதனை வைத்தியர்கள் கண்டறியும் முறை/ போர்ச்சூழல் காசநோயில் ஏற்படுத்திய தாக்கம்/உயிர் மூலக்கூற்றுத் தொழில்நுட்ப மூலமாக (Xpert MTB/RIR test) சளிப்படலச் சோதனை/ காசநோய் விழிப்புணர்வுப் பாடல்கள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிவான விளக்கத்தை வழங்குகின்றது.