ஆர். சுரேந்திரகுமாரன், வீ.பிரேமகுமார் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
24 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள், ஆரம்ப நிலையை அறிவது எப்படி? வாய்ப்புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் வராமல் தடுக்க வழி, மார்பகப் புற்றுநோய்கள், மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், கேடயப் போலிச் சுரப்பிப் புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் அறிகுறிகள், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், ஆண்களில் ஏற்படும் புரொஸ்டேட் சுரப்பிப் புற்றுநோய், ஆரோக்கியமான சமச்சீரான உணவு எப்படி இருக்கவேண்டும்? தினமும் உணவுப் பிரிவுகள் அடங்கும் உணவை உண்ணுங்கள், தீங்கான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகிய விடயங்கள் பற்றிய சுருக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.