சுகாதார அமைச்சு. கொழும்பு 5: தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம், சுகாதார அமைச்சு, 555/5 தரைத்தளம், பொதுச் சுகாதாரத் தொகுதி, எல்விட்டிகல மாவத்தை, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2012. (கந்தான: ஜீ.சீ.பிரின்டர்ஸ், 44/4, 3வது ஒழுங்கை, ஜெயசூரிய மாவத்தை, ஹப்புகொட).
ix, 23 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன? மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே இனங்காணுவதற்கான வழிகள் ஆகிய இரு பிரிவுகளில் இச்சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. தன்னால் நடத்தப்பட்ட சுக வனிதையர் பிணியாய நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் ஆரம்பக் கண்டுபிடிப்பு சம்பந்தமான தரவுகளின் அனுபவங்களைக் கொண்டு இந்த நூலை உருவாக்குவதற்கு உதவியாக இருந்தவர் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி ஷிரந்திகா விதான அவர்களாவார். வைத்திய கலாநிதி ஏ.எஸ்.அனுஷ்யந்தன், வைத்திய கலாநிதி எஸ்.எச்.நஸீம்டீன்,பொது சுகாதார தாதிய பரிபாலகி திருமதி லக்ஷ்மி ஹெட்டியாராய்ச்சி ஆகியோரை உள்ளடக்கிய செயற்குழு இந்நூலை தமிழாக்கம் செய்துள்ளது.