தம்பி பரா. அவுஸ்திரேலியா: வைத்திய கலாநிதி தம்பி.பரா, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைசஸ் ரூ பிரின்டர்ஸ், இல. 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).
200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
தனது அன்பு மனைவி சரோஜினிதேவியின் 75ஆம் பிறந்ததினச் சிறப்பு மலராக இந்நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இந்நூலில் இடம்பெறும் மருத்துவ நோயியல் விடயங்கள் அன்றாட மனித வாழ்வில் நடப்பவையேயாயினும், ஆரம்பகட்டத்தில் அவற்றை நாம் ஒரு பொருட்டாகச் சிந்திப்பதில்லை. காரணம் இவற்றால் மனிதரின் அன்றாட வாழ்வில் பெரும் இடையூறுகளோ, தாக்கங்களோ உடனடியாக எற்படுவதில்லை. காலப்போக்கில் பின்விளைவுகளை இவை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துகொள்வதில்லை. உறக்கம், குறட்டை ஒலி, கனவுகள், வியக்கத்தக்க மூக்கு, பற்களும் காவி படிதலும், உரோமமும் அதன் குணாதிசயங்களும், காதும் அதன் செயற்பாடுகளும் பாதிப்புகளும், நகம், வியர்வையும் அதன் செயற்பாடுகளும், மானிடரும் மதுவும் செயல்பாடுகளும் ஆகிய பத்து கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62788).