அன்னை தெரேசா தாய்மார் கழகம். யாழ்ப்பாணம்: அன்னை தெரேசா தாய்மார் கழகம், ஆறுகால்மடம், வராகி அம்மன் கோவில், கொக்குவில் மேற்கு, கொக்குவில், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
56 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஆறுகால்மடம் குடும்பநல உத்தியோகத்தர் பிரிவில் 2012ஆம் ஆண்டு முதல் அன்னை தெரேசா தாய்மார் கழகம் செயல்பட்டு வருகின்றது. வராகி சனசமூக நிலையத்தினூடாக குடும்பநல உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் வராகி வீதியிலும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களிலும் உள்ள தாய்மார் கர்ப்பிணிகள் குழந்தைகள் என தாய்-சேய் நலன் சார்ந்த மருத்துவ, சுகாதார ஆலோசனைகளும், சிகிச்சை, தகவல் வழங்கல் என்பனவும் இவ்வமைப்பில் இயங்கும் தாய்மார்களினால் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவ்வமைப்பின் பணிநீட்சியாக ‘அன்னையரின் ஆரோக்கியா” என்ற நூல் வெளியீடும் அமைகின்றது. இந்நூலில் அன்னை தெரேசா தாய்மார் கழகத்தின் உருவாக்கம், செயற்பாடு, வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய அறிக்கைகளும், கர்ப்பகாலத்தில் தெரிந்திருக்கவேண்டியவை, கர்ப்பகாலத்தில் குருதியமுக்கம், கர்ப்பகால உடற்பயிற்சி, தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம், அன்னையரின் சுகவாழ்விற்கு அன்பர்களின் பங்களிப்பு குழந்தைகளின் புத்திக் கூர்மைக்கு தூண்டல் செயற்பாடுகளின் முக்கியத்துவம், எமது வாழ்வு பூங்காட்டிலா குப்பை மேட்டிலா (கவிதை), ஆரோக்கியமான திருமண வாழ்வும் குடும்ப திட்டமிடலும், ஆரோக்கியமான இளமைப் பருவத்தை நோக்கி, கதிர்வீச்சுச் சிகிச்சையிலிருந்து புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கான ஆலோசனைகள் சில, கருவளக் குறைவு, மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவது எப்படி? ஜப்பானிய 5 எஸ் முறைகள், முதலுதவி ஆகிய தலைப்புகளில் அமைந்த ஆக்கங்களும் இந்நூலில் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன.