தொற்றுநோயியல் பிரிவு. கொழும்பு: தொற்றுநோயியல் பிரிவு, சுகாதார மகளிர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: கிராப்பிக் சிஸ்டம்ஸ்).
28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபடும் ஊழியருக்கான இவ் வழிகாட்டி, தீவிர சுவாசத் தொற்றுக்களின் கட்டுப்பாட்டில், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முன்னணியில் நிற்கும் குடும்ப சுகாதார ஊழியரின் பங்கை விளக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாய்-சேய் நல வைத்திய அதிகாரி டபிள்யூ. வில்லியம்ஸ் அவர்களாலும், சுகாதார மகளிர் விவகார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய கலாநிதி ஈ.சுந்தரலிங்கம் அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுவாசத் தொற்றுக்களின் அறிகுறிகள், பிள்ளையின் நிலையை மதிப்பிடுதல், பிள்ளையின் நோயை இனங்காணுதல், வயது 2 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையின் நோய் நிலைமையை இனங்காணுதல், காதுப் பிரச்சினை உள்ள பிள்ளைகள், தொண்டை அழற்சி அல்லது தொண்டை நோவு உள்ள பிள்ளையின் பராமரிப்பு, சுவாசத் தொகுதித் தொற்றுள்ள பிள்ளையின் பராமரிப்பில் தாயின் பங்கு, தீவிர சுவாசத் தொற்றுக்கள் பற்றிய சுகாதாரக் கல்வி ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam467).