13502 வளமான வாழ்க்கை: யோகா-மூலிகை-இயற்கை உணவு-வைத்தியம்.

நாகலிங்கம் குலசிங்கம். சுவிட்சர்லாந்து: கிருஷ்ணா யோகா நிலையம், சூரிச் ஹரே கிருஷ்ணா ஆலயம், 1வது பதிப்பு, 2017.(சுவிட்சர்லாந்து: அச்சக விபரம் தரப்படவில்லை).

134 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 26×19 சமீ.

யோகா-மூலிகை-இயற்கை உணவு-வைத்தியம் ஆகியவற்றின் பயன்பாடுகள் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவை தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் ஆசிரியர் இம்மலரை உருவாக்கியுள்ளார். கிருஷ்ணா யோகா நிலையத்தின் இருபதாவது ஆண்டு நிறைவு வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. இறைவன் படைப்பில், யோகத்தின் பூரணத்துவம், இயற்கை உணவுகளின் அபூர்வ சக்தி, மாணவர்களுக்கு, யோகக்கலையைக் கற்க விரும்பும் மாணவர்களின் கவனத்திற்கு, ஆரோக்கிய வாழ்வு, நோயின்றி வாழ என்ன சாப்பிடலாம், நோய்களும் அதன் சிகிச்சைகளும், ஊதிவிடும் புகையால் உருக்குலையும் உடல்கள், நமது உடல்நலம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், மூன்று கடன்கள், நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், கல்லீரல் செயற்பாடு, ஆஸ்த்மா, நீரிழிவு, மூலநோய், இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, குடல்புண், மூட்டுவலி இடுப்பு வலி, புற்றுநோய், ஆரோக்கிய வாழ்வுக்கு பக்தி அவசியம், அரிய சக்திதரும் அற்புத மூலிகைகள், உடல்நலத்தைப் பாதுகாக்கும் இயற்கையான சைவ உணவுகள், உண்ணா நோன்பு அது எதற்கு, கடவுளின் சிருஷ்டியில் நம் உடலின் அதிசயங்கள், மரக்கறி உணவா அதில் சத்து இருக்கா?, சைவ உணவா அதை எப்படிச் சாப்பிடலாம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24950). 

ஏனைய பதிவுகள்

Cazino Online Romania

Content Suntem transparenți și obiectivi: Bonus 100 Winmasters Casino Am caștigat de păcănele pe cazino.strânsă, cum pot retracta câștigurile? Sunt șanse să câștigi bani reali

16144 துன்பத்தின் வித்து விடுதலை.

கொக்குவில் செ.ஞானசேகரம். யாழ்ப்பாணம்: அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா சங்க இணைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (4), 20 பக்கம்,