13508 மூலிகைச் செயல் தொகுப்பு (Action of Herbs).

பொன். இராமநாதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி பொன். இராமநாதன், விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், இந்து மகளிர் பாடசாலை ஒழுங்கை, கந்தர்மடம்).

xvi, 205 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ.

பல்கலைக்கழகச் சித்த மருத்துவ மாணவர்களுக்கான துணைப் பாடநூல். இந்நூலின் முதலாம் பகுதியில் மருத்துவச் செய்கைகள், அவற்றுக்குரிய முக்கிய மூலிகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறை என்பன விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் சில பிணியியல் நிலைகளில் பயன்படும் மூலிகைகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அத்துடன் கற்ப மூலிகைகள், பற்பமாக்கப் பயன்படும் மூலிகைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது பகுதியில் தாவரவியல் பெயர் வரிசையில் ஒழுங்குபடுத்தப்பெற்ற மூலிகைப் பட்டியல்களும் ரெசின்களும் தரப்பட்டுள்ளன. மேலும் தனிமருந்துப் பொருட்களின் அட்டவணையொன்று தாவர இனம், விலங்கு இனம், தாது இனம் என மூவகையில் பகுத்துத் தரப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24942). 

ஏனைய பதிவுகள்