சி.சி.வேலும்மயிலும். பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், தெணியம்மன் வீதி, புலோலி மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 1995. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம்).
40 பக்கம், விலை: ரூபா 10.20, அளவு: 21×14 சமீ.
வைத்தியர் சி.சி.வேலும்மயிலும் அவர்களின் விஷகடி தொகுப்புகளும், விநாயகர் தருமநிதிய மருத்துவத் தொகுப்புகளும் இணைந்து இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விஷம் தீண்டியவருக்குச் செய்யவேண்டிய முதலுதவியையும், மூலிகை உதவியுடன் செய்யக்கூடிய வைத்திய முறைகளையும் இந்நூல் தருகின்றது. பாம்புக்கடி, நாய்கடி, பூனைக்கடி, தேள் (பூரான்), கொடுக்கான் கடித்தல், புலிமுகச் சிலந்தி, மட்டத்தேள் நண்டுவாய்க்காலி (நட்டுவக்காலி), தேனி, குளவி கடிக்குரியவை, எலிக்கடி, அட்டை, மரவட்டை, மயிர்க்கொட்டி, கரப்பான் பூச்சி, அரணைக்கடிக்கு, தாராவுண்ணிக்கடி, மண்ணுணிப்பாம்புக்கடி, ஓணான் கடி, காணாக்கடி, நச்சுத்தன்மை பொருந்திய எவை கடித்தாலும் பொது சிகிச்சை விபரம், அரளிக்காய், அரளிவேர் உன்பதனாலேற்படும் நச்சுக்குணங்களை நீக்க, நக விசம், ஆரோக்கிய நிலைக்குரிய மூலிகைகள், நோய்களும் மருத்துவமும், முற்றாகத் தீட்டாத அரிசியையே உணவாக உட்கொள்ளல் வேண்டும், நலமான வாழ்வுக்கு ஆகிய தலைப்புகளில் ஏராளமான விடயங்களைச் சுருக்கமாகத் தந்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam417).