யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
40 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
தாய்ப்பால் ஊட்டல், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளுங்கள், புத்தி சாதுரியம் மிக்க குழந்தைகளை உருவாக்குவோம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துள்ள உணவு தயாரிப்பும் அதன் முக்கியத்துவமும், பாடசாலை செல்லும் சிறார்களுக்கு, சிறுவர்களுக்கான சுவையுள்ள போசணை உணவுகளின் குறிப்புகள், உங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்விற்கு பழங்களும் காய்கறிகளும், ஒவ்வொரு தனிநபருக்கும் ஏன் வழமையான உடற் செயற்பாடுகள் அவசியம்? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஓடிவிளையாடு பாப்பா ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் சிறுவர் சுகாதாரம் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. வடமாகாண சுகாதார அமைச்சு 2016இல் நடத்திய வடமாகாண ஆரோக்கிய விழாவையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இதுவும் ஒன்று.