13524 தமிழர் கலைகள்.

கா.சிவத்தம்பி (பதிப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம், தபால் பெட்டி எண் 2311, 8031 சூரிச், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(14), 314 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 15 சமீ., ISBN: 955-9429-00-0.

தமிழர் இசை மரபு, தமிழ் நாடக வரலாறு, தமிழர் கட்டிடக் கலை, தமிழர் ஓவியம், தமிழர் சிற்பக்கலை, தமிழர் நடனம், தமிழர் இலக்கிய வரலாறு ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தமிழர் இசை மரபு (மீரா வில்லவராயர்), தமிழ் நாடக வரலாறு (திலகன்), தமிழர் கட்டடக் கலையின் வளர்ச்சி (அகிலன்), தமிழரின் கட்டக் கலை மரபும் புதுமையும் (இரா.கலைக்கோவன்), தமிழர் ஓவியம் (சனாதனன்), தமிழர் சிற்பக்கலை (தேவமணி ரஃபேல்), தமிழர் நடன வரலாறு (சிவசாமி), சிலப்பதிகாரத்தில் சடங்குநிலை நடனங்களும் நாடகங்களும் (கா.சிவத்தம்பி), தமிழர் இலக்கிய வரலாறு (கா.சிவத்தம்பி) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. நூல் 2005இல் வெளியிடப்பட்டதென நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதெனினும், பதிப்பகத்தினரின் தகவலின் அடிப்படையில் இது 2007இல் வெளியிடப்பட்டுள்ளது. பாரிய மாற்றங்களுடன் இந்நூல் மீண்டும் 2018இல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50758).

ஏனைய பதிவுகள்

12951 – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: