13528 மூனாவின் கிறுக்கல்கள்.

மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, மே 2019. (ஜேர்மனி: Stuttgart).

176 பக்கம், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×21.5 சமீ., ISBN: 978-3-9813002-3-9.

முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருப்பவர் மூனா. அவரது கருத்தோவியங்களை ஈழப்போருக்கு முன்னும் (2009க்கு முன்) ஈழப்போருக்குப் பின்னும் (2009க்குப் பின்) என வகைப்படுத்தி, ஈழப்போருக்குப் பின்னான கார்ட்டூன்களில் இருந்து 85 கருத்தோவியங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து நூலாக்கி இருக்கின்றார். ஈழத்துத் தமிழ் நூல் வரலாற்றில் கருத்தோவியத் தொகுப்புகளின் வருகை விரல்விட்டெண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்ற இன்றைய பதிப்புலகச் சூழலில் முழுமையான வண்ணப்பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல் சிறப்பிடம் பெறுகின்றது. தமிழ் கார்டியன் பத்திரிகை, பொங்குதமிழ் இணையம் ஆகியவற்றில் இவரது கருத்தோவியங்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வகுமாரன் (மூனா), ஓவியக்கலையை அ.மார்க்கு அவர்களிடம் கற்றவர். எண்பதுகளில் இலங்கையிலிருந்து குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் குடியேறியவர். ஜேர்மனியில் Eugen Zensinger, Susane Hausner ஆகியோரிடம் ஓவியக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்