சோதிலிங்கம் கோகிலன் (கோகில்). கோப்பாய்: நுண்கலை மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (இணுவில்: கோகில் ஸ்கிரீன்ஸ், செல்வகம், இணுவில் கிழக்கு).
viii, (4), 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இந்நூலில் வெளிப்பாட்டுவாதம், மனப்பதிவு வாதம், கனவடிவ வாதம், டாடாஇசம், சர்ரியலிசம், அரூபவாதம், மனரிசம், பேவிஷம், அரூபவெளிப்பாட்டு வாதம், உருவவாதம், உண்மை நிலை, எதிர்கால வாதம், கியூமானிஷம், விஞ்ஞானரீதியான இயற்கைத் தன்மை, ஓவியர்களும் பின்பற்றிய கொள்கைகளும் ஆகிய 15 இயல்களில் பல்வேறு ஓவியம் சார்ந்த கொள்கைகளையும் அவற்றை உருவாக்கிய ஓவியர்களையும் பற்றிய தகவல்களையும் காணமுடிகின்றது. கோப்பாய், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரிய மாணவரான சோ.கோகில் இந்நூலை சித்திரக்கலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் எழுதி வழங்கியுள்ளார். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15652).