கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 178 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 700., அளவு: 21.5×4.5 சமீ., ISBN: 978-955-659-608-3.
நவீன ஓவியம் முதல் சமகால ஓவியம் வரையிலான அறிகைப் பரப்பில் வைத்திய கலாநிதி கொண்ஸ்ரன்ரைன் அவர்கள் மேற்கொண்ட இப் பதிவில் நவீனத்துவம் என்றால் என்ன? நவீன ஓவியம், பின்நவீனத்துவ ஓவியம், நவீன ஓவியத்தின் ஆரம்பம், பின் மனப்பதிவு நவிற்சி வாதம், புதிய கலை, பேவிசம், ஜெர்மனிய வெளிப்பாட்டுவாதம், கியூபிசம், எதிர்காலவாதம், சுப்பர்மாடிஸம், கட்டுமானவியல், டாடாஇசம், டீ-ஸ்டிஜில், அகவய யதார்த்தவாதம், ஆர்ட் டெகோ, சமூக யதார்த்தவாதம், ஆரூப வெளிப்பாட்டுவாதம், வர்ணப்பரப்பு ஓவியம், வர்ணப்பூச்சுக்குப் பின்னான அரூபம், ஜனரஞ்சக ஓவியம், அசைவியக்கக் கலைவடிவம், எளிமைவாதம், கட்புல ஓவியம், பிளக்ஸஸ், நிகழ்த்துகைக் கலை, கடின வரம்புகளைக் கொண்ட ஓவியம், புதிய வெளிப்பாட்டுவாதம், புகைப்படத் தத்ரூபம், கருத்துத்தளக் கலை, வீடியோகலை, நிர்மாணக்கலை, புதிய ஊடகக் கலை, நவீன பின்நவீன சமகால ஓவிய செல்நெறிகளின் காலத் தொடர்ச்சி ஆகிய 34 தலைப்புகளில், ஓவியவெளியின் நீட்சியையும் பன்மை மகிழ்கோலங்களையும் (style) துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது.