தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 24.5×17.5 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் தமிழிசை விழாவையும் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தமிழிசைப் போட்டிகளையும் நடத்தி பரிசளித்து வருகின்றது. 2018ஆம் ஆண்டு தை 19, 20, 21 ஆம் திகதிகளில் தமிழிசை அளிக்கைகளும், ஆய்வரங்கமும், மூத்த கலைஞர்களுக்கான தலைக்கோல் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றவேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. தமிழர் செவ்வியற் கலைகளும் வர்க்க முரண்பாடும் (சபா ஜெயராசா), தமிழ் இசைச் செல்வம் (அ.சு.தனபாண்டியன்), தமிழிசையே மூல ஊற்று (தெ.மதுசூதனன்), இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் (நா.சுப்பிரமணியன்), தமிழ்ப் பாட்டும் இசையும் (எஸ்.வையாபுரிப்பிள்ளை), தமிழிசைக்கு ஞானசம்பந்தர் தந்த புதுமைப் பண் (ஞானா குலேந்திரன்), சைவசித்தாந்த மேன்மைகளில் தேவாரம்: பண்ணும் இசை மரபும் (கிருபாசக்தி கருணா), வேதம் சொல்லாததையும் நாதம் சொல்லும் (இராஜேஸ்வரி ஜெகாநந்தகுரு), ஈழத்துத் தமிழிசையின் வளர்ச்சிக் கட்டங்கள் (தவமைந்தன் தவநாதன் ரொபேட்), இசை மரபு (பி.சந்திரசேகரம்), இலங்கையில் கர்நாடக இசை வளர்ந்த கதை (நவாலியூர் நா.சச்சிதானந்தன்), வடமராட்சியின் இசைப் பாரம்பரியம் (இராசம்மா மரியாம்பிள்ளை), ஒரு கலைஞனின் நினைவுப் பாதையில் (எஸ்.எம்.நடராஜா பகவதர்), மட்டுநகரில் இசைப்பாரம்பரியம் (சி.முருகப்பா), கர்நாடக இசை வளர்ச்சியில் விமர்சனத்தின் பணி (சாந்தி சச்சிதானந்தம்) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.