செ.சொர்ணலிங்கம். கொழும்பு: சிவத்திரு மன்றம், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி).
xxviii, 611 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4767-00-3.
முன்னுரை, இசைக்காய சைவசித்தாந்தக் கண்ணோட்டம், வாக்கேயகாரர்களும் இசைமேதைகளும், இந்திய இசை வல்லார்;கள் (கி.மு. காலத்தவர், கி.பி. காலத்தவர், கர்நாடக இசையின் பொற்கால இசைமேதைகள், தமிழிசை மும்மணிகள், சங்கீத மும்மூர்த்திகள், 19ஆம் நூற்றாண்டினர் (தஞ்சை நால்வர்), 20ஆம் நூற்றாண்டினர் (தமிழிசைச் சங்கம், சென்னை-பட்டம் பெற்றோர்), ஈழத்து இசைவல்லாளர்கள் (வாய்ப்பாடு, சிறப்புக் காரணங்களால் பெருமையுற்றோர், வயலின், வீணை, ஓதுவார், கதாப்பிரசங்கத்தினர், நிருத்தம், நிருத்தியம், நாடகம், ஹார்மோனியம், வில்லிசை, உடுக்கு, மிருதங்கம், மங்கல வாத்தியம், சிவத்திருமன்ற இசைக்குழு), இசைக்கலை-சங்க இலக்கியக் கண்ணோட்டம் (பண்டைத் தமிழிசை நுட்பங்கள், தாளங்கள், சப்த சுரங்களின் இலக்கணங்கள், சங்கீதப் பழமொழிகள்), இயற்றமிழோடு பொருந்தும் தேவாரப் பண்கள் ஆகியவை முதலாம் பாகத்திலும், அறிவனாரின் பஞ்சமரபு (யாழ் மரபு, வாச்சிய மரபு, கண்ட மரபு, வங்கிய மரபு, கூத்து மரபு, தாள மரபு), தமிழிசை இயக்கம், இசை வரலாறு (நூல்கள், முக்கிய காலகட்டங்கள், சாதனைகள், சங்கீத மும்மூர்த்திகளுக்கு முன்னும் பின்னுமுள்ள இசை நிலைகள்), பின்னுரை ஆகியவை இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளன. யாவரையும் கருதிப் பொது நோக்கிலும், மாணவர்களுக்கு இசையுள்ளிட்ட கவின்கலைகள், தமிழ், இந்து நாகரிகம், சித்தாந்த சைவம் என்பவற்றிற்காய சிறப்பு நோக்கிலும் பொதுப் பாடநூலாகவும் துணை நூலாகவும் கொள்ளக்கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 242699).