சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி, ரசிகா கட்டிடம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1989. (சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி, ரசிகா கட்டிடம்).
(10), 53 பக்கம், விலை: இந்திய ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இயற்றிய தமிழ்த் திரை இசைப்பாடல்களின் தொகுப்பு இதுவாகும். அம்மையப்பன், ஒரே ரத்தம், காஞ்சித் தலைவன், குறவஞ்சி, தூக்குமேடை, நாம், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி, பூம்புகார், பூமாலை, மக்கள் ஆணையிட்டால், மந்திரி குமாரி, மறக்க முடியுமா?, ரங்கோன் ராதா, ராஜா ராணி, வீரன் வேலுத்தம்பி ஆகிய படங்களுக்காக கலைஞர் எழுதிய இனிய திரைப்படப் பாடல்களை எழுச்சித் தமிழ், நேசத் தமிழ், பாசத் தமிழ், நகைச்சுவைத் தமிழ் என நான்கு பிரிவுகளின்கீழ் வகுத்துத் தொகுத்துத் தந்துள்ளார் சிலோன் விஜயேந்திரன். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24925).