13538 சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பக்தி பாடல்கள்.

எம்.கந்தையா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: எம்.கே.பொன்னையாபிள்ளை அன் கோ, 231, நொறிஸ் வீதி, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 2: எம்.செல்வராஜ், சிவாஜி அச்சகம்).

76 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

புகழ்பூத்த தென்னிந்திய திரைப்படப் பாடகர்களான சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 43 பக்திப்பாடல்களும், டி.எம்.சௌந்தரராஜன் பாடிய 113 பக்திப்பாடல்களும், சூலமங்கலம் இராஜலட்சுமி சகோதரிகள் பாடிய 15 பக்திப்பாடல்களுமாக மொத்தம் 171 பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பாடலின் முன்னும் அப்பாடலை இயற்றியவர் பெயரும், சில பாடல்களுக்கான இராகம், தாளம் என்பவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14309 உலக வங்கியும் இலங்கையின் வறுமைக் குறைப்பும்.

சீமாஸ் கிளாரி (அபிவிருத்தி ஆலோசகர்), ரிச்சர்ட் றியோச் (தலைவர்), ப்றைன் வோல்ப் (நிறைவேற்று செயலாளர்). லண்டன் ளுறு8 1ளுது: இலங்கைக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், இல. 3, பொண்ட் வே, 1வது பதிப்பு, 1993.