ஆத்மஜோதி சமய சேவையினர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 1967. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).
(4), 28 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12 சமீ.
பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவர். 25.1.1920இல் பிறந்த இவரது இயற்பெயர் சுந்தரம் ஐயர் பாலசுப்பிரமணியம். தைப்பூசத் திருநாளொன்றில் பிறந்த இவர் சிறந்த முருக பக்தராவார். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தலையில் காவித்துண்டு கட்டி கண்ணில் கறுப்புக்; கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி தருவார் பித்துக்குளி முருகதாஸ். அவர் 17.11.2015இல் சென்னையில் தனது 95அவது வயதில் மறைந்தார். இந்நூல் அமரர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய ஆரம்பகால பக்திப் பஜனைப்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.